20251004_182622_BNicholson_Newsroom_GeneralConference_October_2025_1401.JPG
Additional Resource

ஈஸ்டர் வார இறுதியில் உலகளாவிய பொது மாநாடு மற்றும் பயபக்தியான கூட்டம் நடைபெறும்

மாநாட்டில் நான்கு பொது அமர்வுகள் இடம்பெறும்

உலகம் முழுவதுமிருந்து இலட்சக் கணக்கான மக்கள், ஏப்ரல் 4-5, 2026 அன்று பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 196வது வருடாந்தர பொது மாநாட்டிற்காககூடுவார்கள். யூட்டாவின் சால்ட் லேக் சிட்டியில் உள்ள மாநாட்டு மையத்திலிருந்து தொடங்கும் இந்த இரண்டு நாள் நிகழ்வில், இயேசு கிறிஸ்துவின்வாழ்க்கை மற்றும் போதனைகளை மையமாகக் கொண்ட நம்பிக்கை மற்றும் சமாதானத்தின் செய்திகள் இடம்பெறும்.

இந்த ஆண்டு மாநாடு ஈஸ்டர் ஞாயிறுஅன்று நடைபெறுவதால் பல செய்திகள் இயல்பாகவே ஈஸ்டரின் மையக்கருத்தான இயேசு கிறிஸ்துவின் உண்மையான உயிர்த்தெழுதல், அவருடைய எல்லையற்ற பாவநிவர்த்தி, மரணத்தின் மீதான அவருடைய வெற்றி, மற்றும் அவர் மூலமாக வரும் நம்பிக்கை, புதுப்பித்தல், மற்றும் சமாதானம் ஆகியவற்றைச் சுற்றியே அமையும். இரட்சகர் வாழ்ந்துகொண்டு இருப்பதனால், தனிநபர்களும் குடும்பங்களும் தங்கள் சீஷத்துவப் பயணத்தில் பெலத்தையும், நோக்கத்தையும், மகிழ்ச்சியையும் கண்டடைய முடியும் என்பதற்கு சபைத் தலைவர்களின் பிரசங்கங்கள் சாட்சி பகருகின்றன.

பயபக்தியான கூட்டம் என்பது என்ன?

சனிக்கிழமை காலை அமர்வின் போது நடைபெறும் பயபக்தியான கூட்டம் மற்றொரு முக்கியமான தருணமாகும் — இது பிற்காலப் பரிசுத்தவான்கள் ஒரு புதிய சபைத் தலைவரையும் பிரதான தலைமையையும் ஆதரிப்பதற்கு ஒரு வாய்ப்பாகும்.

பயபக்தியான கூட்டங்கள் என்பவை பல்வேறு பரிசுத்த நோக்கங்களுக்காக நடத்தப்படும் சிறப்பு வாய்ந்த, பரிசுத்தமான  கூட்டங்களாகும். அவை கூட்டத்தில் ஒரு உயர்ந்த ஆவிக்குரிய உணர்வைக் கொண்டு வருகின்றன. பயபக்தியான கூட்டங்களில், ஒரு புதிய சபைத் தலைவருக்கு ஆதரவளித்தல் (ஏப்ரல் 4 ஆம் தேதி காலையில் நடைபெறுவது போல), ஒரு ஆலயத்தை அர்ப்பணித்தல், சிறப்பு நினைவுகூரல்கள் மற்றும் பிற பரிசுத்த நோக்கங்கள் அடங்கியுள்ளன.

சில பயபக்தியான கூட்டங்கள் (உதாரணமாக) ஏப்ரல் 2020இல் ) புதிய ஏற்பாட்டின் வேர்களைக் கொண்ட ஒரு அடையாளச் செயலானஓசன்னா சத்தமிடுதல் இடம்பெற்றது. ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறும் பயபக்தியான கூட்டத்தில் ஓசன்னா சத்தமிடுதல் இடம்பெறாது.

புதுப்பிக்கப்பட்ட அமர்வு அட்டவணை

மாநாட்டு வடிவத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, ஏப்ரல் 2026 பொது மாநாட்டில் சனிக்கிழமை மாலை அமர்வு இடம்பெறாது . மாநாடு, விசுவாசமுடைய அனைத்து தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்காகநான்கு பொது அமர்வுகளைக்கொண்டிருக்கும்.

இந்த மாநாடு 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், உலகின் எந்த மூலையிலிருந்தும் மக்கள் சிறிய மற்றும் பெரிய ஒன்றுகூடல்களிலும், வீடுகளிலும் குடும்பச் சூழல்களிலும் இதனைக் காண முடியும்.

நான் பின்னர் எவ்வாறு பார்க்கலாம் அல்லது கேட்கலாம்?

ஒளிபரப்பைத் தொடர்ந்து, அந்தச் செய்திகள் உரை, ஒலி மற்றும் காணொளி வடிவங்களில், 98 மொழிகள் வரையிலான பல்வேறு சேனல்களில், தேவைக்கேற்ப பார்க்கும் மற்றும் படிக்கும் வகையில் கிடைக்கும். இந்த சேனல்கள் சுவிசேஷ நூலகம், ஊடக நூலகம்,  பொது மாநாட்டு யூடியூப் சேனல் மற்றும்  சபை பத்திரிக்கைகள்ஆகியவை அடங்கும்.